அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!….

Photo of author

By அசோக்

அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!….

அசோக்

Idli kadai: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை துவங்கி பல படங்களிலும் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக உயர்த்திகொண்டார். ஒருபக்கம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் சிறப்பான கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி இருக்கிறார். இந்திய சினிமா அளவில் ஒரு முக்கிய நடிகராக தனுஷ் பார்க்கப்பட்டு வருகிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படம் எடுத்து கோலிவுட்டில் இயக்குனராக மாறினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ராயன் என்கிற படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

அதேபோல் தனது சகோதரி மகன் நிவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்தியராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

80 சதவீதம் படம் முடிந்துவிட்டது. நடிகர்களின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது. இந்த படம் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங் இன்னும் பாக்கி இருப்பதால் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் என இப்போது அறிவித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, அடுத்தநாள் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அதன்பின் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறைகள் வருகிறது. எனவே, இட்லி கடை படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துவிடும் என்கிறார்கள்.