இந்த நீரை ஒரு மாதம் குடித்தால் உங்கள் உடலில் ஏற்படும் அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

0
267

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சோம்பில் நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு நன்மைகள் உண்டு.

நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் எப்படி சாப்பிட்டாலும் சோம்பு தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். எப்படியாப்பட்ட தொங்கும் தொப்பையும்,உடல் எடையும் ஒரே மாதத்தில் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும்.சோம்பு நீரை தயாரிக்கும் முறையை பற்றியும் ,நீங்கள் அறிந்திராத சோம்பு நீரை பற்றிய நன்மைகள் ஏன அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சோம்பு நீர் தயாரிக்கும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்னர் கொதிக்கும் தண்ணீரை இறக்கி அதில் ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் சோம்பை சேர்த்து 10 நிமிடம் வரை மூடி வைத்துவிட வேண்டும்.பின்னர் அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவுதாங்க ஒரு பதினைந்து நிமிடத்தில் இந்த சோம்பு நீரை நாம் தயாரித்து விடலாம்.வருஷக்கணக்கில் உடல் எடையை குறைப்பதற்கும், மாதவிடாய் பிரச்சனையை தீர்ப்பதற்கும்,நாம் போகாத மருத்துவர் இருந்திருக்க முடியாது.வாங்க இதை எவ்வாறு குடிக்க வேண்டும் இதில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சோம்பு நீரின் பயன்கள்!

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனென்றால் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல் சோம்பு தண்ணீர் குடித்தால் மிக எளிதாக,நாள்பட்ட உடல் பருமனை குறைக்கும்.

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து எளிதில் உடல் எடையை குறைக்க உதவுகிறது மேலும் வயிற்றை சுற்றி உள்ள தேவையற்ற சதைப்பகுதி தொப்பையை கரைந்து சரியான உடல் அமைப்பைத் தரும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, அளவுக்கு அதிகமாக பசி ஏற்படும்.அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள் ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் அது இயற்கையிலேயே பசியை அடக்கும் தன்மை உடையது.

கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

முக்கியமாக மெலடோனின் என்ற மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும் இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

காலையில் காபி டீ சாப்பிடுவதற்கு பதிலாக சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மேலும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் செரிமான தன்மையை ஊக்குவிக்கும்.

தற்போதைய காலத்தில் சுகாதாரமற்ற உணவு காற்று மாசுபாடு காஸ்மெடிக் பொருட்கள் என பல வழிகளில் நம் உடலில் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த டாக்ஸின்கள் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனையை இறுதியில் குறைக்கும் சக்தி இந்த சோம்பு தண்ணீருக்கு உள்ளது.

சோம்பு நிறை குடிக்கும் நேரங்கள்.

வெதுவெதுப்பான நிலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும்

தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கலாம்.

அதேபோல் மூன்று வேளை சாப்பிட்ட பிறகும் இந்த சோம்பு தண்ணீரைக் குடித்து வரலாம்.

நீங்கள் ஏதோ ஒரு முறையில் இந்த சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் ஒரே மாதத்தில் எப்படியாப்பட்ட தொப்பையும் குறைந்து உங்கள் உடல் அழகான அமைப்பை பெரும்.மேலும் மேலே கூறிய அனைத்து பிரச்சினைகளும் விரைவில் குணமாகும்.

Previous articleமறையும் வெயில் பட்டால் அழகு கூடுமா?
Next articleஅக்குள் கருமை, தொடை கருமை, கழுத்து கருமை 5 நிமிடத்தில் நீங்கிவிடும்!