உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!

0
184

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க

நாம் தினமும் வேண்டாமென்று, தூக்கி எறியும் இந்த கறிவேப்பிலையை தினமும் காலை வேளையில் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து,விட்டமின் ஏ, விட்டமின் பி,விட்டமின் சி, விட்டமின் பி2,போன்ற சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.பொதுவாகவே கறிவேப்பிலையை தலைக்கு அரைத்து பூசினால் முடி நன்றாக வளரும் என்பதனை நாம் அறிந்திருப்போம்.

ஆனால் பச்சைக் கறிவேப்பிலையைப் நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் அறிந்தது உண்டா? தெரிந்துகொள்ளுங்கள்! உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்!

பச்சை கறிவேப்பிலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

1. இதய நோய்:
3 கறிவேப்பிலையை தினமும் காலை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை பெற்றது.இதனால் ரத்த ஓட்டம் சீராகி இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

2. சர்க்கரை நோய்:

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சை கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து ரத்தத்தில் சீரான சர்க்கரையின் அளவை பராமரிக்கும்.

3. செரிமானக் கோளாறு:

செரிமானக் கோளாறுகளால் நீண்ட நாளாக அவதிப்பட்டு வருவோர்,காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உங்களின் செரிமான கோளாறு விரைவில் நீங்கும்.

4.சளி பிரச்சனை

நாள்பட்ட சளித் தொல்லை இருப்பவர்கள் நுரையீரலில் சளி கோர்த்திருப்பவர்கள்,ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் 7நாட்களில் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

5. கல்லீரல் பிரச்சனை:

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கல்லீரலை பாதுகாத்து சீராக செயல்பட செய்வதோடு,கல்லீரலில் தேங்கியுள்ள தேவையற்ற தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

6. ரத்தசோகை நோய்:

ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பேரீச்சம் பழத்துடன் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகையில் இருந்து உங்களை மீட்டெடுக்கும்.

7. கொழுப்புகளை கரைக்க:

தொப்பையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து,அழகான இடையை பெற உதவும்.

இவ்வளவு சிறப்புமிக்க கறிவேப்பிலையை நாம் உணவில் தூக்கி எறியாமல் அதனை நாம் சாப்பிட வேண்டும்.மேலும் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கறிவேப்பிலையைத் தூக்கி எறிய சொல்லிக் கொடுக்காமல் உணவோடுகறிவேப்பிலையும், சேர்த்து சாப்பிட சொல்லி கொடுத்தால் வாழ்நாளில் எந்தப் பிரச்சனையும் வராமல் அவர்களை நாம் காக்கலாம்.

Previous articleடைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleஒரே இரவில் எப்பேர்ப்பட்ட மாதவிடாய் (Periods) பிரச்சனையாக இருந்தாலும் வந்துவிடும்!