Pot Water: இந்த வெயிலுக்கு பாரம்பரியமான பானை நீர் பருகுங்கள்..!

0
128
Pot Water
#image_title

Pot Water: அடிக்கிற வெயிலுக்கு அனைவருக்கும் தற்போது பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை தான் குடிக்க வேண்டும் என்று தோன்றும். அதுவும் வெயிலில் சென்று வந்தால் போதும் உடனே நாம் பிரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டர் தான் பருகுவோம். ஆனால் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே பிரிட்ஜ் கண்டுப்பிடித்துவிட்டார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா?  அந்த காலத்தில் பயன்படுத்திய பானை (Pot Water Benefits in Tamil) தண்ணீரை தான் நம் முன்னோர்கள் பருகி வந்தனர். அதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது.

தற்போதும் ஆங்காங்கே பானைகளில் தண்ணீர் வைத்து இந்த வெயிலுக்கு குடித்து வருகின்றனர். பானையில் தண்ணீர் குடித்தால் நம் உடலுக்கு அதிகமான அளவு நன்மைகள் கிடைக்கின்றன.

மண்பானை தண்ணீர் பயன்படுத்தும் முறை

முதலில் பானை வாங்கி அதனை கல் உப்பு போட்டு முன்புறமும், உட்புறமும் நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். கல் உப்பு போட்டு பானையை கழுவினால் பானையில் உள்ள அழுக்கு முழுவதுமாக வெளியேறிவிடும்.

பிறகு அதில் தண்ணீரை பிடித்து வைத்து சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் சேர்த்துக்கொள்ளலாம். அதன் பிறகு அதில் வெட்டி வேர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்யும் தேய்ச்சான் கொட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேய்ச்சான் கொட்டை நீரில் உள்ள அழுக்கை அடியில் படிய வைத்து பிறகு சுத்தமான நீராக மாற்றும் தன்மை காெண்டது. மேலும் விருப்பப்பட்டால் ஒரு எலுமிச்சை பழத்தை அப்படியே அதில் போட்டு வைக்கலாம்.

மண்பானை தண்ணீர் பயன்கள்:

இவ்வாறாக பானையில் தண்ணீரை தயார் செய்த பிறகு, தரையில் சிறிதளவு மணலை போட்டு அதில் தண்ணீரை தெளித்து, அதன் மேல் பானையை தூக்கி வைத்தால் பானை தண்ணீர் கோடைக்காலங்களிலும் நன்கு குளிர்ச்சியாக இருக்கும். இது போன்று வெயில் காலங்களில் பானையில் நீர் வைத்து அதனை அருந்தி வந்தால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது. பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை பருகுவதால் சிலருக்கு ஏற்படும் தொண்டை வலி, சளி போன்றவை ஏற்படும். அவர்கள் இந்த பானை தண்ணீரை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: Nungu sarbath: அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுனு நுங்கு சர்பத் குடிங்க.. எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்..!