இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

Photo of author

By Parthipan K

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மேலும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் என்பதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள் மற்றும் மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாக கணபதி ஹோமம் செய்வது அவசியம்மாகும்.

கணபதி ஹோமம் செய்வதன் மூலமாக நிறைய பலன்கள் கிடைக்கும் கணபதிஹோமம் செய்வதினால் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், செல்வ செழிப்பும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

மேலும் அக்னிஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும். கல்வி

குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்க்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும். கணபதி ஹோமம் செய்வதன் மூலமாக தனசேர்க்கை மற்றும் பண கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் குடும்ப பிரச்சனைகள் தீர்வதற்கு

ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுக்க கட்டாயமாக கணபதி யாகம் செய்ய வேண்டும் என்று ஐதீகம் உள்ளது.