Akshaya Tritiya 2024: தங்கம் வாங்குவது இருக்கட்டும்.. உங்க வீட்டில் இதை பார்த்தீங்கனா போதும் யோகம் தான்..!

Photo of author

By Priya

Akshaya Tritiya 2024:இந்து சாஸ்திரத்தின் படி அட்சய திருதியை முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரை மாதம்  வளர்பிறை நாளில் வரும் அமாவாசை அடுத்த மூன்றாவது நாள் தான் அட்சய திருதியை கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது என்பது பொருள். இந்நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு அதாவது 10 மடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பொதுவாக மக்கள் தங்க நகைகளை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் தங்கம் மட்டுமல்லாமல் நாம் தானியங்கள், உப்பு, மஞ்சள், அரிசி, மற்றவர்களுக்கு தானம் போன்றவற்றை செய்தால் (what to do on Akshaya tritiya in Tamil) புண்ணியமும், வீட்டில் ஐஸ்வர்யமும் பெருகும்.

இந்த அட்சய திருதியை அன்று அனைவரும் இதுபோன்று ஏதாவது வாங்கி சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் நம் வீட்டில் வழக்கமாக பார்க்கும் பல்லி அட்சய திருதியை அன்று மட்டும் நம் கண்ணில் படாதாம். ஆனால் அன்று பல்லியை பார்த்து விட்டால் நம் பாவங்கள் நீங்கி, வீட்டில் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை அன்று வாஸ்து பகவான் பல்லியை யார் கண்ணிலும் தென்பட கூடாது என்று கட்டளையிட்ட நாளாக பார்க்கப்படுகிறது. எனவே அன்று பல்லிகள் யார் கண்ணிலும் படாதவாறு மறைந்துக்கொள்ளுமாம். ஆனால் அட்சய திருதியை அன்று நாம் பல்லியை பார்த்துவிட்டால், நம் செய்த முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி வீட்டில் இருந்து வந்த பீடை, தரித்திரம் அனைத்தும் விலகி நன்மை கிட்டும் என்பது நம்பிக்கை. எனவே அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்துவிடுங்கள்.

மேலும் படிக்க: Akshaya Tritiya 2024: தங்கம் தான் வாங்கணும்னு அவசியம் இல்லை..! செல்வம் பெருக இதை செய்தால் போதும்..!