அரசியலக்கு வர எனக்கும் ஆசை தான்.. அதுதான் என் கொள்கையும் கூட – ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!!  

0
176
Open Talk on Helping Raghava Lawrence
Open Talk on Helping Raghava Lawrence

அரசியலக்கு வர எனக்கும் ஆசை தான்.. அதுதான் என் கொள்கையும் கூட – ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!!

நடிகர் மற்றும் நடன இயக்குனர் உள்ளிட்ட பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் பல ஆண்டுகளாக உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு உதவி புரியும் வகையில் பல அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். அறக்கட்டளைகள் மட்டுமின்றி தன்னால் முடிந்த உதவியையும் ஊனமுற்றோர் முதியவர்கள் என பலருக்கும் செய்வது தான் இவரது வழக்கம். இவரைத் தொடர்ந்து KPY பாலா அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் தங்களால் ஈன்ற உதவியை செய்து வருகின்றனர்.

சமீப காலமாக KPY பாலா உடன் இணைந்து ராகவா லாரன்ஸ் வறுமையில் இருக்கும் நபர்களுக்கு உதவுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வரிசையில் நேற்று மாற்றம் அறக்கட்டளை மூலம் கல்லேந்தள் என்ற கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இதில் KPY நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அங்கு வந்த ராகவா லாரன்ஸுக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பும் அளித்தனர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் அவர் தொடர்ந்து உதவி புரிவது குறித்து பல கேள்விகளை எழுப்பினர். அதிலும் நீங்கள் அரசியலுக்கு வர விருப்பப்படுகிறீர்களா? அதற்காக தான் இப்படி உதவிகள் செய்கிறீர்களா என்று கேட்டனர். அவர்களுக்கு  பதிலளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, எனக்கு அரசியலுக்கு வருவது என்பது ஒரு ஆசைதான், அப்படி வந்தால் மக்களுக்கு பல நல உதவிகளை செய்யலாம்.

ஆனால் எனது அம்மாவிற்கு அதில் துளியும் விருப்பமில்லை. அதனால் அந்த ஆசையை அப்படியே கைவிட்டு விட்டேன். எனது கொள்கையே அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான். நான் எதையும் எதிர்பார்த்து இவற்றையெல்லாம்  செய்யவில்லை. கடவுளுக்கு செய்யும் ஒரு சேவையாக எண்ணி தான் மக்களுக்கு உதவி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.