நம் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.இந்த ஆடிப்பெருக்கன்று மாங்கல்ய கயிறை மாற்றினால் தண்ணீர் எப்படி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அது போன்று நம் மாங்கல்ய பாக்கியம் பெருகும். எவ்வாறு பூஜை செய்து மாங்கல்ய கயிறு மாற்றுவது என்பதனை பற்றி விரிவாக காண்போம்.
மற்ற நாட்களை விட இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் தாலிக்கயிறை மாற்றினால் நம் மாங்கல்லிய பாக்கியம் மிகமிக பெருகும்.நிறை சொம்பில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் துளசியை போட்டு பூவால் அலங்கரிக்க வேண்டும்.பின்னர் பல்சுவை உணவுகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வைத்து மாங்கல்லியத்தையும் வைத்து (வேறொரு மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டிக்கொண்டு மாங்கல்ய கயிறை அல்லது கொடியை கழட்டி தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் மஞ்சள் கயிறாக இருந்தால் பழைய கயிறுக்கு பதில் புதிய கயிறை மாற்ற வேண்டும்.கொடியாக இருந்தால் மாங்கல்ய தோடு கொடியையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்)சுத்தம் செய்த அல்லது கயிறு மாற்றிய இந்த மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு வெற்றிலை பாக்கின் மீது வைத்த தண்ணீர் பெருகுவது போல என் மாங்கல்ய பாக்கியமும் பெருகி நிலைத்திருக்க வேண்டும் என்று அம்மாளை வணங்க வேண்டும்.பின்னர் இந்த தாலிக்கயிற்றினை
அவரவர்களின் கணவர் இடத்திலோ அல்லது சுமங்கலி பெண்ணிடத்திலோ கொடுத்து அதனை கட்டிவிடச் சொல்லவேண்டும்.