வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

0
209
Bengal all-out!! The first Test cricket match against India!
Bengal all-out!! The first Test cricket match against India!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இருந்தது.

இந்நிலையில் 2 டெஸ்ட்  கொண்ட  போட்டிகளில் முதலாவது போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய கேப்டன் ராகுல், சுப்மன் கில்,கோலி சொற்பமான ரன்னில் வெளியேறினர்.அடுத்து சற்று ஆடிய ரிஷப் பந்த் 46 ரன்னில் வெளியேற ,இந்திய அணி விக்கெட் இழந்து தடுமாறியது.அடுத்து புஜாரா, ஸ்ரேயாஸ் இணை சேர்ந்து வங்க பந்து வீச்சினை சமாளித்த இவர்கள் 149 ரன்கள் எடுத்த நிலையில்,புஜாரா 90  ரன்னிலும்,ஸ்ரேயாஸ் 86 ரன்னிலும் அவுட் ஆகினர்.அடுத்து பின் வரிசையில் அஸ்வின்(56) மற்றும் குல்பித் யாதவ் (40)   ரன்கள் எடுத்தனர். இறுதியில் 404 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணியில் மெஹிதி , இஸ்லாம் தலா 4  விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற தொடங்கியது. தொடக்க வீரர் நஜ்மல் உசேன் முதல் பந்திலேயே சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி இந்திய பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து  133 ரன்கள் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று ஆடிய அந்த அணி 55.5  ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஒருவர் கூட 30 ரன்கள் தாண்டாத நிலையில் முஷ்பீர் ரகுமான் மட்டும் 28 ரன்கள் எடுத்தார். சிறப்பான பந்து வீச்சினை அளித்த குல்தீப் யாதவ் 4 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். வங்க அணி பாலோ ஆன் ஆகிவிட்ட நிலையில் இந்தியா தனது 2-வது இன்னிங்க்சை விளையாடி வருகிறது.

Previous articleஇதனை பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleபெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!