சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் இலவசம்!! குதூகலத்தில் ஊழியர்கள்!!

Photo of author

By CineDesk

சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் இலவசம்!! குதூகலத்தில் ஊழியர்கள்!!

CineDesk

Updated on:

சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் இலவசம்!! குதூகலத்தில் ஊழியர்கள்!!

எச்.சி.எல். டெக்னாலஜி லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாக கொண்டு உலக அளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது. இந்த நிறுவனம் தகவல் தொழில் நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வசதிகள், பொறியல் நுட்பங்கள், ஆய்வுசார் சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது.

இது 31 நாடுகளில் கிளை கொண்டுள்ளது. வானூர்தியியல், ராணுவம். மென்பொருள் உருவாக்கம். கொள்கலன். தயாரிப்பு. தொலைத் தொடர்பு சேவைகள். நுகர்வோருக்கான மின் பொருட்கள். மருத்துவ சேவை என பல துறைகளில் தொழில் செய்கிறது. போர்பஸ் நாளேடு உலக அளவில் 2000 நிறுவனங்களை பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. இது ஆசிய அளவில் ஐம்பது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. மேலும் அந்த சலுகையை கேட்டு எச்.சி.எல் நிறுவனத்தின் ஊழியர்கள் குதூகலத்தில் உள்ளனர். அந்த சலுகை என்னவென்றால் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு  மெர்சிடிஸ் பென்ஸ் கார் இலவசம் என்று ஹெச். சி. எல். நிறுவனம் அறிவித்துள்ளது.