முடியை கருமையாக்குவதுதோடு.. பொடுகை போக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் டை இது!!

Photo of author

By Gayathri

தலையில் உள்ள வெள்ளை முடியை கருமையாக்கும் கருஞ்சீரக ஹேர் டை தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி
2)காபி தூள் – இரண்டு தேக்கரண்டி
3)நெல்லிக்காய் பொடி – 100 கிராம்

செய்முறை விளக்கம்:

முதலில் 50 கிராம் அளவிற்கு கருஞ்சீரகம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை இரண்டு மாதத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.

அதேபோல் 200 கிராம் அளவிற்கு நெல்லிக்காய் பொடி வாங்கிக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் பி[பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இல்லையென்றால் நெல்லிக்காயை உலர்த்தி வீட்டிலேயே பொடி செய்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்குங்கள்.பின்னர் இரண்டு தேக்கரண்டி கருஞ்சீரத்தை சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்தெடுங்கள்.பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி காபி தூளை அதில் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

பின்னர் 100 கிராம் அளவிற்கு நெல்லிக்காய் பொடியை அதில் சேர்த்து கட்டிபடாமல் கரண்டி கொண்டு கிண்டி விடவும்.நெல்லிக்காய் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகப் பொடியை அதில் சேர்த்து கிளறவும்.

இந்த ஹேர் டையை நாள் முழுவதும் ஆறவிட வேண்டும்.பிறகு தலையில் இந்த ஹேர் டையை அப்ளை செய்து 2 மணி நேரத்திற்கு உலர விடுங்கள்.பிறகு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசுங்கள்.இந்த கருஞ்சீரக ஹேர் டையை மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி கருமையாவதோடு பொடுகு,முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.