ஆயுர்வேதத்தின்படி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் சாப்பிடவேண்டிய சூப்பர்ஃபுட்ஸ்!

0
193

1) திரிபலா பொடி:

திரிபலா பொடியை நெய் மற்றும் தேனுடன் சம அளவு கலந்து இரவில் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

2) நெல்லிக்காய்:

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால் உங்கள் விழித்திரை செல்கள் பாதுகாக்கப்படுகிறது மற்றும் ஆரோக்கியமான தந்துகிகளை மேம்படுத்துவதிலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.

3) கல் உப்பு:

கண்களுக்கு நல்ல உப்பு கல் உப்பு மட்டுமே. எனவே உங்கள் உணவுகளில் மற்ற உப்புகளை காட்டிலும் அதிக கல் உப்பை பயன்படுத்துங்கள், இதனால் கண்பார்வை மேம்படும்.

4) திராட்சைப்பழம்:

திராட்சைப்பழத்தில் உள்ள பாலிஃபீனாலிக் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும். இதனை சாப்பிடுவதன் மூலம் உங்களின் பார்வைத்திறன் மேம்படும்.

5) பாதாம்:

சூப்பர்ஃபுட் ஆக கருதப்படும் பாதாமில் வைட்டமின் ஈ சத்து உள்ளது. இது உங்கள் மூளையை கூர்மையாக்குவது மட்டுமல்லாமல் உங்கள் கண்களுக்கும் நன்மை அளிக்கிறது. வைட்டமின் ஈ கண்களை ஆரோக்கியமாக வைத்து மாகுலர் சிதைவை தடுக்கிறது.

6) மஞ்சள்:

மஞ்சள் உங்கள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும், இதில் குர்குமின் என்கிற உறுப்பு உள்ளது மற்றும் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் கண் வறட்சி பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

7) தேன்:

கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், வெளிச்சம் அதிகரிக்கவும் தினமும் தேனை உட்கொள்ள வேண்டும். இயற்கையாகவே இனிப்பு சுவையுடைய தேன் ருசியாக இருப்பது மட்டுமல்லாது, ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் கண்பார்வையை மேம்படுத்துகிறது.

8) குங்குமப்பூ:

குங்குமப்பூ மிகவும் விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது எந்த அளவுக்கு விலைமதிப்புள்ளதாக இருக்கிறதோ அதேயளவு அதிகமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இரும்புச்சத்து நிறைந்த இந்த பொருளை 2 முதல் 3 நாட்களுக்கு நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலின் இரத்த அணுக்களை அதிகரிக்கிறது.

Previous articleரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!
Next articleரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு!