வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!

0
131
#image_title

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!

பணம் சம்பாதித்தாலும் அவை நம் கையில் தங்காமல் ஏதோ ஒரு வழியில் செலவு வந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை கடைபிடித்து பிடித்தல் போதும்.செல்வம் வீடு தேடி வரும்.

வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்:

1.வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைப்பதோடு சாமிக்கு பூ மாலை செலுத்தி வழிபட வேண்டும்.

2.பணம் கொடுத்தல்,வாங்கலின் போது வீட்டு வாசல் படியின் மேல் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.

3.செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வீடு துடைக்க கூடாது.அதேபோல் அமாவாசை,பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் வீடு துடைக்க கூடாது.

4.வீட்டில் இருக்கும் உரல், ஆட்டுக்கல்,அம்மி அதேபோல் வாசற்படி ஆகியவற்றில் உட்காரக்கூடாது.

5.மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஏற்றி வைத்த விளக்கை தானாக அணையவிடக் கூடாது.அதேபோல் ஊதியும் அணைக்ககூடாது.அவற்றை புஷ்பத்தின் காம்பால் அணைக்க வேண்டும்.

6.கிழிந்த துணிகளை உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.ஆடைகளை வைக்கும் இடம் நீட்டாக இருக்க வேண்டும்.

7.உப்பு மற்றும் அரிசியை தரையில் சிந்தக்கூடாது.

8.வீட்டில் சண்டை,சச்சரவு இருக்க கூடாது.ஒருபோதும் கெட்டை வார்த்தைகளை கூறக் கூடாது.

9.ஊனமுற்றவர்கள்,ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதால் பல நன்மைகள் உண்டாகும்.

10.வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும்,மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் ஜென்ம பாவம் விலகி செல்வம் பெருகும்.

11.வீட்டில் அரிசி,பருப்பு,உப்பு ஆகியவை குறியாமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.

12.பணம் மற்றும் நகைகள் வைத்திற்கும் இடங்களில் வாசனை நிறைந்த ஏலக்காய்,சோம்பு,பச்சை கற்பூரம்,துளசி ஆகியவற்றை வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் செல்வம் பெருகும்.

Previous articleமஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற வெந்தயத்தை இப்படி பயன்படுத்துகள்! 100% ரிசல்ட் கிடைக்கும்!!
Next articleஎலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்!!