ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைவதற்கு முன்பு ஓபிஎஸ்-ஐ தான் மத்தியில் நாடி இருந்தனர். எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் இவரை வைத்து ஆட்டத்தை தொடங்கலாம் என்று திட்டம் தீட்டினர். ஆனால் இவையனைத்தும் தவிடு பொடியாக்கும் விதத்தில் எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுவிட்டார். அதுமட்டுமின்றி சில கட்டுப்பாட்டு வரைமுறைகளுடன் தான் கூட்டணி ஒப்பந்தமும் உள்ளது.
அதன் பெயரில் ஓபிஎஸ் கட்சிக்கு அருகாமையில் கூட வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அதனை அப்படியே ஏற்றுக் கொண்ட பாஜக, முழுவதுமாக அவரை தவிர்த்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி, மத்திய மந்திரி உள்ளிட்டோர் வருகை புரிந்த போது சிறிது நேரம் கூட பார்க்க ஒதுக்கவில்லை. இதனால் மன உளைச்சலான ஓபிஎஸ் பாஜகவின் ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற்றிக்கொண்டார்.
அதேபோல இவரின் முக்குலத்தோர் வாக்குகள் முக்கியம் என்று எண்ணிய திமுகவும் இவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பை தெரிவிப்பதற்கு முன் ஸ்டாலினையும் நேரில் சென்று ஓபிஎஸ் சந்தித்தது அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இதயெல்லாம் முன்கூட்டியே அறிந்த அண்ணாமலை அவரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
அதன் பேரில் தமிழகத்திற்கு வந்த பி எல் சந்தோஷிடமும் இது குறித்து எடுத்துரைத்துள்ளார். ஆனால் அவர் சிறிதும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. மேலிடத்தின் உத்தரவு, கட்டாயம் அவரை கட்சியில் இணைக்க மாட்டோம் எனக் கூறிவிட்டார். ஆனால் அண்ணாமலை விடாது, நமக்கு முக்குலத்தோர் வாக்கு முக்கியம் அதனால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
. இது ரீதியான தகவலை அறிந்து கொண்ட பன்னீர்செல்வம் பாஜக கூட்டணிக்காக காத்திருக்கலாமா அல்லது திமுகவை சென்றடையலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.