சிறப்பாக செயல்பட்ட இந்தியா; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்!

Photo of author

By Vijay

பெருந்தொற்று மேலாண்மையில், இந்தியா சிறப்பாக செயல் பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் கொண்டுள்ளார்.

நாட்டின் 23 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடு அழைக்கும்போது நாட்டுக்காக சேவை செய்வது அடிப்படை கடமை என்பது போல தடுப்பூசி பிரசாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டு மக்களையே சாரும் என தெரிவித்தார்.

ஆக்கபூர்வமான பணிகளை நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற காந்தியின் போதனைக்கு ஏற்பார் போல, தடுப்பூசி பிரச்சாரம் பொருத்தமானதாக இருக்கும். கொரோனா தொற்று காலம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீப காலமாக பல்வேறு துறைகள், தங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி தேசத்தை பலப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். நமது நாட்டு ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பணிசெய்து நம்மை பாதுகாத்து வருகின்றனர்.

21ம் நூற்றாண்டு, காலநிலை மாற்றத்தின் சகாப்தமாக பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை உருவாக்குவதில் இந்தியா உலக அரங்கில் தலைமை வகிப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரு குடும்பம் எப்படி அடுத்த தலைமுறைக்காக பாடுபடுகிறதோ அதனைப் போன்று, அடுத்த தலைமுறை வளர்ச்சிக்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.