தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை! ரஜினிகாந்த்தை மிரட்டிய தயாரிப்பாளர்!

Photo of author

By CineDesk

தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை! ரஜினிகாந்த்தை மிரட்டிய தயாரிப்பாளர்!

ரஜினிகாந்த், நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். எம். ஜி. ராமச்சந்திரனுக்குப் பிறகு, தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த இரண்டாவது நடிகர் ஆவார். நான்கு மாநில திரைப்படங்களில் சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

அவருக்கு 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது மற்றும் 2016 ஆம் அண்டு பத்ம விபூஷன் விருது ஆகிய விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. 4 வது விஜய் விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருதைப் பெற்றார்.இந்தியாவின் 45 வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு “ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது” வழங்கப்பட்டது.

இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் 50 வது பதிப்பில், அவருக்கு ஐகான் ஆஃப் குளோபல் ஜூபிலி விருது வழங்கப்பட்டது. 67 வது தேசிய திரைப்பட விருதுகளில், அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.  ஸ்டார் ரஜினிகாந்த் கே பாலச்சந்தர் என்பவரால் தமிழ் சினிமாவில் அறிவிக்கப்பட்டார். கே பாலச்சந்தர் கண்டெடுத்த முத்துக்கள் இவரும் ஒருவர். இந்த நிலையில் அவர் பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். அவரின் எளிமையான நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் ரஜினி அவர்கள் வளர்ந்து வரும் காலக் கட்டங்களில் அவரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுவதாகக் கூறி தயாரிப்பாளர் ஒருவர் ரஜினி அவர்களை தன்னுடைய அலுவலகத்திற்கு வர வைத்து அசிங்கப்படுத்தினார் என்று  தர்பார் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூறி மிகவும் வருத்தப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் அவர்களிடம்  தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை என அந்த தயாரிப்பாளர் மிரட்டியதாகவும் கூறினார்.

ஆனால் ரஜினியை மிரட்டிய தயாரிப்பாளர் யார் என்பதைப் பற்றி ரஜினி அவர்கள் கூறவில்லை. தற்போது 35 ஆண்டு கால வினாவிற்கு விடையாம் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் அவர்களை அசிங்கப்படுத்திய  அந்த தயாரிப்பாளரின் பெயர் சிவசுப்பிரமணியம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜெயலலிதா அவர்கள்  நடித்த கணவன் மனைவி உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்துள்ளாராம்.