இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை
தமிழகத்தில் ரிமோர்ட் ஆக்சஸ் ஆப் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கையாடல் செய்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கி வருகின்றன.
தற்போதைய சூழலில் இந்தியாவில் வங்கி சேவையானது அத்தியாவசியமனதாக உள்ளது.அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து கொண்டு வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் பொதுமக்கள் முடிந்தளவு வெளியில் வராமல் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் வங்கி வேலைகளை முடித்து கொள்ளவும் அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்யும் சம்பவமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக எதாவது ஒரு வங்கியின் பெயரை சொல்லி அந்த வங்கியிலிருந்து அழைக்கிறோம் என்று கூறி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து ATM PIN நம்பர் உள்ளிட்ட முக்கிய விவரங்களை சேகரித்து அதன் மூலம் எளிதாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.
இது போன்ற ஆன்லைன் மோசடி கும்பலால் சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தன்னுடைய 85000 ரூபாயை இழந்துள்ளார். இவ்வாறு ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர்.
பொதுமக்களிடம் KYC பிராசஸ் என்று கூறி வங்கி அதிகாரிகளை போல தொடர்பு கொண்டு பேசி முக்கிய விவரங்களை சேகரிக்கின்றனர்.பின்னர் இந்த தகவல்களை பயன்படுத்தி அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இவ்வாறு வங்கி பெயரை சொல்லி வரும் அழைப்புகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மொபைல் போனில் யார் எதை இன்ஸ்டால் செய்ய சொன்னாலும் அதை செய்ய வேண்டாம். வங்கியில் இருந்து வரும் மெசேஜில் இருக்கும் லிங்க் கிற்குள் நுழைய வேண்டாம். மேலும் லோன் தருவதாக கூறி வரும் மெசேஜ்கள் அல்லது கால்களையும் நம்பி எந்த தனிப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
ஒருவேளை நீங்கள் இதை நம்பி விவரங்களை அளித்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து எஸ்பிஐ பொதுத்துறை வங்கி ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.