மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

Photo of author

By Pavithra

மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.