எம்ஜிஆரை கால் கடுக்க நிக்க வைத்த பாகவதரின் மனைவி! பழிவாங்கிய எம்ஜிஆர்

0
476
#image_title

திரைப்பட உலகின் ஜாம்பவான் என்று சிவாஜி எம்ஜிஆர் காலங்களுக்கும் முன் இருந்தவர் தியாகராஜ பாகவதர். கடைசி வரை ஒரு ஹீரோவாகவே நடித்திருப்பார் அவர். மாபெரும் உச்சத்தில் இருந்தவர் அவர். அந்த காலத்தில் பாடி நடிப்பவர்கள் தான் உச்சத்தில் இருந்தார்கள். அதனால் தியாகராஜ பாகவதர் நன்றாக பாடுவார் . அதனால் அவர் அந்த காலத்தில் மிகவும் உச்சத்தில் இருந்தார்.

 

அப்பொழுது தியாகராஜ பாகவதர் உடன் நடித்து விட மாட்டோமா என்று எம்ஜிஆரே ஏங்கிய உள்ள காலமது.

 

இப்பொழுது தியாகராஜ பாகவதர் உடன் நடிக்கும் ஒரு வாய்ப்பு எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்துள்ளது. முதலில் எம்ஜிஆர் நடிக்க சம்மதித்த தியாகராஜ பாகவதர், அதன்பின் மறுத்துவிட்டதாகவும் அவருடைய வாய்ப்பு பறிபோய் விட்டது.

 

ஏன் என்று கேட்டு விட வேண்டும் என்று தியாகராஜ பாகவதரின் வீட்டிலேயே கால் கதுக்க நின்றுள்ளார் எம்ஜிஆர். ஆனால் அவருடைய மனைவி அவர் உள்ளே இருக்கிறாரா? இல்லையா ?என்று கூட பதில் சொல்ல மாட்டாராம்.

 

அதன் பின் இயக்குனர் ரகுநாத் ஒருவர் தான் இந்த படத்தில் எம்ஜிஆர் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தாராம். அந்த படத்தில் தியாகராஜ பாகவதர் குற்றம் செய்ததால் அவருடைய கண்களை பழுக்க காய்ச்சி ஒரு கம்பியில் சுட வேண்டும். சுட மறுத்த ஒருவரை தியாகராஜ பாகவதரை அதை கையில் வாங்கி தனது இரு கண்களையும் பொசுக்கி கொள்வாராம்.

உடனே கண்கள் தெரியாத பாகவதற்கு ஒரு குச்சி எடுத்து தருவாராம் எம்ஜிஆர்.

 

அதனால் தியாகராஜ பாகவதருக்கு குச்சி எடுத்து தருபவர் நீங்கள் தானே என்று மக்கள் எம் ஜி ஆர் ஐ அடையாளம் கண்டனார். எம் ஜி ஆர் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் பதிய ஆரம்பித்த காலம்.

 

அதன் பின் மாபெரும் உச்சிக்கே சென்ற எம் ஜி ஆர் அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகவும் ஆனார். தியாகராஜ பாகவதர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை சென்று அவருடைய அனைத்து புகழ், கொடிகட்டி பறந்த பெருமைகளும் மன்னனோடு மண்ணாக போனது. வறுமையில் வாடினார் தியாகராஜ பாகவதர்.

 

அதன்பின் ஒருநாள் , எம்ஜிஆர் அவர்கள் தினமும் வெளியே செல்லும் பொழுது ஒரு பெண் தினமும் நின்று கொண்டிருப்பார். பெண்களை காக்க வைக்க கூடாது என்று நினைப்பவர் எம்ஜிஆர். ஆனால் இந்த பெண்ணை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

 

ஒரு நாள் ரவீந்திரன் அந்தப் பெண்ணிடம் நீங்கள் யார் என்று கேட்கிறார்” நான் பாகவதரின் மனைவி எம்ஜிஆரை பார்த்து உதவி கேட்கலாம் என்று வந்தேன் ” என்று அவர் கூறியுள்ளார்.

 

அதை எம்ஜிஆர் இடம் ” வெளியே நிற்கும் பெண் யார் என்று தெரிகிறதா ?என்று எம்ஜிஆர் இடம் ரவீந்திரர் கேட்க “தியாகராஜரின் மனைவி தானே எனக்கு தெரியும் நீ போ” என்று சொல்லிவிட்டாராம்.

 

அடுத்த ஒரு சில தினங்களிலேயே தியாகராஜ பாகவதரின் குடும்பத்திற்கு எம்ஜிஆர் பண உதவி. தியாகராஜ பாகவதரின் தெருவிற்கு தியாகராஜ பாகவதரின் பெயர் சூடல், திரையரங்கத்திற்கு தியாகராஜ பாகவதரின் பெயர் சூடல் என செய்திகள் வெளிவந்தன.

 

எம்ஜிஆர் ரவீந்திரனிடம் “பத்திரிக்கையை பார்த்தாயா என்று கேட்டாராம். பார்த்தேன் என்று அவரும் கூறினாராம். உதவி செய்வது செய்யாதது என்பதற்காக அல்ல !.ஒருத்தரை காக்க வைத்தால் என்ன பாடு படுவார்கள் என்பதை உணர்த்தவே அந்த பெண்ணிற்கு அப்படி செய்தேன் என்று அவர் சொன்னாராம்.

Previous articleசிவாஜி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதுதானாம்!
Next articleகுறத்தி மகன் படத்தில் கமலஹாசன்! அவரைப் பார்த்துள்ளீர்களா!