அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?

Photo of author

By Parthipan K

அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?

Parthipan K

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அவன் இவன்.

இயக்குனர் பாலா எப்பொழுதுமே தனது படத்தில் ஏதேனும் ஒரு புதிய யுத்தியை கொண்டு வருவார். அது மக்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்று விடும்.

விக்ரம்க்கு சேது, சூர்யாக்கு நந்தா என இருபெரும் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர்.

அந்த வரிசையில் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். அதாவது விஷால் அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகனாக ஆர்யா வருவார். இதில் விஷாலின் அம்மாவாக 80ஸ் நாயகி அம்பிகா முற்றிலும் இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தில் ஆர்யாவும் விஷாலும் திருடர்களாக நடித்திருப்பார்கள். விஷாலுக்கு நாடக கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். எனவே நாடகங்கள், தெருக்கூத்தில் கலந்து நடிப்பார்.

படத்தின் ஒரு காட்சியில் நவ ரசங்களை தனது முகப்பாவனையில் காட்டி பல பாராட்டுக்களை பெற்றார். மேலும் இந்த திரைப்படம் முழுவதும் கண்ணின் கருவிழியை மையத்தில் வைத்து மாறுகண் போல் நடித்திருப்பார். இதனால் இந்த படம் முடிந்த பிறகும் விஷால் கண் பிரச்சனையால் அவதிப்பட்டார்.

இந்த படத்தின் முதல் கட்சியில் ஜமீன்தாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும், அப்போது ஆடல் கலைஞர்கள் ஆடுவார்கள் அந்த பாட்டில் விஷாலும் பெண் வேடமிட்டு ஆடி இருப்பார்.

மேலும் ஒரு சில காட்சிகளில் பெண் குரலில் பேசியிருப்பார். தற்போது இந்த பெண் குரலுக்கு பின்னணி கொடுத்தது யார் என தெரிய வந்துள்ளது.

அவன் இவன் திரைப்படத்தில் விஷாலின் அந்த பெண் குரலுக்கு டப்பிங் கொடுத்தது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் செந்தில்குமாரி தான்.

இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.