சுயநினைவுகளை இழந்த பாரதிராஜா!! இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்படும் பிரச்சனை.. மனம் திறக்கும் பிஸ்மி!!

0
281
Bharathiraja lost consciousness!! Due to this, the problem in the producer's association.. Bismi opens his mind!!
Bharathiraja lost consciousness!! Due to this, the problem in the producer's association.. Bismi opens his mind!!

தமிழ் சினிமா துறையில் கிராமத்து மண்வாசனையை பரப்பியவர் இயக்குனர் பாரதிராஜா. தனக்கான பாதை இதுதான் என்றும் அதை தவிர்த்து வேறு எந்த விதமான கதைகளையும் படமாக எடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தவர் இயக்குனர் இமயம் ஆவார்.

இவர் சமீப காலத்தில் திருச்சிற்றம்பலம், கள்வன் மற்றும் குரங்கு பொம்மை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தற்பொழுது இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மலேசியாவில் உள்ள அவரது மகளின் வீட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கங்குவா திரைப்படம் வெற்றி அடையாமல் போனதற்கு விமர்சனங்கள் தான் காரணம் என்று தயாரிப்பாளர் சங்கம் மூலம் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் ஆனது இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதற்கு எதிராக உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி :-

தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு புகாரை கொடுத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இந்த விஷயம் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, இரண்டு தனிப்பட்ட நபர்கள் செய்த கூட்டு சதி தான் இது. தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் தனஞ்செயன் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகிறார். அவர்கள் தயாரித்த கங்குவார் திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் அதற்கு ஊடகங்கள் தான் காரணம் என அந்நிறுவனத்திற்கு சாதகமாக தயாரிப்பாளர் சங்கத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவர்கள் செய்த வேலைக்கு தயாரிப்பாளர் சங்கம் தான் காரணம் என கூறி விட முடியாது என்றும் அதற்கு காரணம் ஆக்டிவ் ப்ரொடியூசர் கவுன்சில் தலைவர் பாரதிராஜா அவர்கள் தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் பாரதிராஜா அவர்கள் தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இயக்குனர் பாரதிராஜா அவர்களின் உடல்நிலையானது தற்பொழுது மிகவும் மோசமாக உள்ளது. அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களை கூட அவரால் நினைவு கூற முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர் தற்பொழுது மலேசியாவில் உள்ள அவரது மகளின் வீட்டில் மருத்துவம் பார்த்து க்கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் அவருடைய கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு அதனை பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியா அவர், பாரதிராஜா இருந்திருந்தால் இதற்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்னுமா இந்த பிரச்சனை முடியல.. இந்திய அணியில் யார் தான் ஒப்பனிங்!!  மீண்டும் மீண்டுமா?
Next articleTNPSC யின் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு!! காத்திருக்கும் அரசு வேலைகள்!!