மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!

0
172

மும்பையில் பொதுமக்கள் அனைவரும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் ரயில் மற்றும் பேருந்தை விட்டு இறங்கிய பிறகு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து முறை உதவியாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

அதாவது குறைந்த தூர அளவிலான இடத்திற்கு பயணிப்பதற்கு இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமன்றி இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதாம்.

இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து முறை சிறந்த மற்றும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமன்றி நாம் விரும்பும் பாதைகளிலும் அத்துடன் குறுகலான பாதைகளிலும் கூட இந்த போக்குவரத்து முறையை பயன்படுத்தி கொள்ளலாம்.

தற்போது இந்த சைக்கிள் ஷேரிங் போக்குவரத்து மும்பையில் 2 மெட்ரோ இரயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஐந்து கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம் 35 சதவீத பயணங்கள் குறுகிய தூர பயணங்கள் என்னும் நிலையில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு குறுகிய தூரப் பயணங்களை எளிதாகவும் மலிவான விலையிலும் கடப்பதற்கு இந்த சைக்கிள்-ஷேரிங் முறை உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்
Next articleமருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!