பிக் பாஸ் 5 கன்டஸ்டன்ஸ் லிஸ்ட் வந்தாச்சு!! குக் வித் கோமாளி பிரபலம் உள்ள போக போறாங்கலாம்!!

Photo of author

By CineDesk

பிக் பாஸ் 5 கன்டஸ்டன்ஸ் லிஸ்ட் வந்தாச்சு!! குக் வித் கோமாளி பிரபலம் உள்ள போக போறாங்கலாம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ். பிக் பாஸ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது நெதர்லாந்து நாட்டில் முதலில் உருவாக்கப்பட்டது. பிக் பாஸ் பிரதர்ஸ் என்ற தலைப்பில் நிகழ்ச்சி வடிவத்தை பின்பற்றுகிறது. தமிழில் இதுவரை ஒளிபரப்பான நான்கு பருவங்களையும் பிரபல நடிகர் மக்கள் நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். நான்காவது பருவம் கொரோனா தொற்று காரணமாக தாமதமாக ஒளிபரப்பானது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஹிந்தி நிகழ்ச்சியான பிக் பாஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் ஒரு வீட்டில் 15 பிரபலங்கள் மேற்கொள்ளும் நிகழ்ச்சி. மேலும் ஒவ்வொரு வாரமும் அந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாத ஒருவர் வெளியே நீக்கப்படுவார். அப்படி வெளியே நீக்கப்பட்டு இறுதியில் அந்த வீட்டில் இருக்கும் ஒருவர் தான் அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக இருப்பர். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மிக மிக பிரபலமாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்து வந்தனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாக உள்ளது. அதில் அரசல்புரசலாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான சீசன் 4 போல இந்த ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் தான் துவங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை பற்றி நிறைய செய்தியும் வந்த வண்ணம் உலக உள்ளது. அவ்வாறு வந்த தகவலில் சீசன் 5ல் பிரபல ஜீ தமிழ் சீரியல் செம்பருத்தியின் கதாநாயகனாக நடித்த கார்த்திக் ராஜ் மற்றும் விஜய் டிவியின் பிரபலம் சுனிதா இருவரிடமும் பிக் பாஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாகவே செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் அமைதியாக இருக்கும் தன்மைகொண்டவர். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்யபோகிறார் என்ற பேச்சி இப்போது ரசிகர்கள் இடையில் ஆரம்பித்துவிட்டது. மேலும் குக் வித் கோணமலி சுனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அடுத்த குக் வித் கோமாளி சீசன் 3ல் வர வாய்ப்பில்லை என்ற பேசப்பட்டு வருகிறது.