சீரியலுக்கு வந்துவிட்டார் பிக் பாஸ் அனிதா சம்பத்! வைரலாகும் வீடியோ காட்சிகள்!

Photo of author

By Parthipan K

சீரியலுக்கு வந்துவிட்டார் பிக் பாஸ் அனிதா சம்பத்! வைரலாகும் வீடியோ காட்சிகள்!

சினிமா துறையில் முன்பெல்லாம் நடித்தவர்கள் சிலரைத் தாண்டி அதிகமாக யாரும் பிரபலமாவது  இல்லை.ஆனால் இப்போது அப்படி கிடையாது தன்னுடைய நடிப்பு கலைகளின் மூலம் மாபெரும் வெற்றியை தாண்டிக்கொண்டு வருகிறார்கள். அது போல தான் ‘பிக் பாஸ்’ அனிதா சம்பத் என்பவரும் அவர் முதலில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராகத் தான் இருந்தார்.

பின்னர் கமல்ஹாசன் நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கிவிட்டன.அதில் முக்கியமாக கவனிக்கத்தக்கவர் தான் “அனிதா சம்பத்” அதில் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.இவரின் தோற்றம் மற்றும் செய்தி வாசிப்பில் தமிழ் உச்சரிப்பின் காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை மக்களின் இடையே வந்தது.இந்த மரியாதை எல்லாம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவதற்கு முன் நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் இவர் பிக்பாஸில் விளையாடிய விளையாட்டைப் பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் கூடப் பிடிக்காமல் போய்விட்டது.தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் அனிதா சம்பத்.சில வருடங்களுக்கு முன் சம்பத் என்பவரை காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டார். இப்போது அவர் சீரியலில் காலடி எடுத்து வைத்துள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒற்றை ஆளாய் கலக்கி தற்போது சின்னத்திரை உலகத்தை கலக்கிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கலர்ஸ் டிவியில் தினமும் இரவு 9 மணியளவில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் “ஜில்லுனு ஒரு காதல்” என்னும்   சீரியலில் கெளரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.அந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.