பிக் பாஸ் சீசன்4  ப்ரோமோ ரிலீஸ்!

0
228

 

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 பஸ்ட் புரோமோ வீடியோவானது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று பிக் பாஸ் சீசன் களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோன்று தமிழில் நான்காவது பிக் பாஸ் சீசன் கூடிய சீக்கிரத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

உலகநாயகன் கமலஹாசன் கடந்த மூன்று சீசன்களில் தொகுத்து வழங்கிய நிலையில் நான்காவது சீஸனிலும் அவர் தொகுத்து வழங்குவார் என்று கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுந்த நிலையில்  தற்போது வெளியாகி உள்ள  ப்ரோமோ வீடியோவில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் கம்பீரமான தோற்றத்துடன் களமிறங்கியுள்ளார்.

உண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கிய கமலஹாசன் அரசியல் ரீதியாக பிஸியாக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதனால்தான் நான்காவது சீசனை அவர் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு விடையாக இந்த பிரமோஷனில் அவர் அதிரடியாக களம் இறங்கி உள்ளார்.

கூடிய சீக்கிரத்தில் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல தொடங்கிவிட்டது.

Previous articleஒன்பது லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா உயிரிழப்பு
Next articleகாங். 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சிதான்!! உள்கட்சி பூசல் குறித்து குலாம் நபி ஆசாத் ஆவேசம்