கவிழ்ந்தது புதுச்சேரி அரசு! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

Photo of author

By Sakthi

புதுச்சேரியில் நடைபெற்று வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இன்றைய தினம் நாராயணசாமி புதுச்சேரி சட்டசபையில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆகவே இன்று காலை 10 மணி அளவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவில்லை ஆகவே அந்த மாநிலத்தின் சபாநாயகர் சிவக்கொழுந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று அறிவித்தார். இதன் மூலமாக கடந்த நான்கரை ஆண்டு காலமாக நீடித்து வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இன்று புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் பொழுது முதலமைச்சர் நாராயணசாமி அதோடு காங்கிரஸ் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் போன்றோர் சட்டசபையில் இருந்து வெளியேறி இருக்கின்றன. இந்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது.

சட்டசபை கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி புதுச்சேரியில் இதுவரையில் நாராயணசாமி அரசு மாநில மக்களுக்கு என்ன செய்தது? நாங்கள் ஆட்சியில் இருந்தபொழுது முடித்து வைத்த திட்டங்களை தான் தொடங்கி வைத்தது அவ்வளவு தானே ஒழிய வேறு எந்த புது திட்டங்களையும் நாராயணசாமி தலைமையிலான அரசு உருவாக்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

அதோடு தொடர்ந்து மத்திய அரசுடனும், துணைநிலை ஆளுனருடனும் மோதல் போக்கை மட்டுமே கடைபிடித்து வந்தார் என்று அதிமுகவை சார்ந்த அன்பழகன் தெரிவித்தார்.