இரு கட்சியின் பெரு தலைகள் மோதல்! வெடிக்கும் பிரச்சார மேடை!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தமிழ்நாட்டின் இரு பெரிய கட்சிகளும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.அந்த கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறது.ஒரு கட்சி ஆனது 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இல்லாத விரத்தியில் அதிரடியான அறிக்கைகளின் வாயிலாக வாக்குகளை சேகரித்து வருகிறது.இதுவே மற்றொரு கட்சியானது ஆட்சியை இந்த வருடமும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மும்முரமாக வாக்கு சேகரிப்பை நடத்தி வருகிறது.
இந்த சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் வரும் வேலையில் இவர்களின் கூட்டணி கட்சியின் இரு பெரிய தலைகளும் நேரடியாக களத்தில் மோதிக் கொள்ள போகின்றனர்.அதாவது பெரிய கட்சிகள் என்று கூறுவது பாஜக மாற்றும் காங்கிரஸ் ஆகும்.இவர்கள் அதிமுக மற்றும் திமுக விற்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை செய்யப் போகின்றனர்.அந்தவகையில் அதிமுக-வை ஆதரித்து பாஜக வும் திமுக வை ஆதரித்து காங்கிரசும் தேர்தல் களத்தில் இரங்கி மோத உள்ளது.
இந்த மோதலின் டிரைலராக திமுகவை ஆதரித்து நாளை மறுநாள் (27.03.2021) அன்று இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகம் வர இருக்கிறார்.நாளை மறுநாள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து குளச்சல் திங்கள் நகரில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.அதற்கு அடுத்த நாளான (28.03.2021) அன்று ராகுல் காந்தி தமிழகம் வந்து திமுக-வை ஆதரித்து பரப்புரை ஆற்ற உள்ளார்.
அடுத்த தலையான நம் பிரதமர் நரேந்திர மோடி அதிமுக வை ஆதரித்து ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி தமிழகம் வந்து பரப்புரை ஆற்ற உள்ளார்.இந்த இரு பெரு கட்சியின் பரப்புரை மோதலை ஆவலுடன் எதிர்பார்த்து அவரது தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.