TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் திரிஷாவுக்கு முக்கிய பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது எதிரி யார் என்பதை விஜய் மீண்டும் உறுதியாக கூறினார். இதனையடுத்து ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தனியாக ரகசிய மீட்டிங் நடைபெற்றதாம்.
அதில் முக்கிய அங்கமாக கட்சியில் திரிஷா இருப்பதாகவும் அவருக்கு விஜய்க்கு அருகிலேயே முக்கிய பதவியும் கொடுக்கப்படுவது குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். முன்னதாக வெளியான லியோ படத்திலேயே இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததுடன் இவர்கள் குறித்து கிசுகிசுவும் வெளியானது. அச்சமயத்தில் விஜய் வீட்டில் விவாகரத்து வரை பிரச்சனை சென்றதாகவும் கூறப்பட்டது.
தற்போது நடத்தப்பட்ட ரகசிய மீட்டிங்கில் பெரும்வாரியான நிர்வாகிகளுக்கு இதில் ஒப்புதல் இல்லாததால் இது குறித்த ஆலோசனையை தள்ளி வைத்துள்ளாராம். அதிலும் ஒப்புதல் அளித்த போஸ்டிங்கிலிருக்கும் நிர்வாகிகள் மற்றவர்களிடம் இது குறித்து பேசி சமாதானம் வாங்கும் படி விஜய் ஆர்டர் போட்டுள்ளாராம். இது ரீதியாக வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜனானயகன் படத்தில் கூட திரிஷா இருபதாகவும் அதில் கூட நெருக்கமாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து திரிஷா அரசியல் என்ட்ரி கொடுப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் இதில் நிர்வாகிகளுக்கு துளி கூட விருப்பமில்லையாம்.