விவாசயிகளின் அழிவில் பெத்த லாபம்.. திமுக பிளானை சுக்கு நூறாக்கிய விஜய்!!

Photo of author

By Rupa

TVK: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 900 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜய் அவர்களுக்கு ஆதரவு குரல் அளிக்கும் வகையில் இன்று போராட்டக்காரர்களை நேரடியாக சந்தித்தார். அதில் அவர், சிறுவனின் வீடியோ-வானது என்னை ஏதோ செய்து விட்டது, அதன் பிறகு தான் உங்களை சந்தித்து ஆக வேண்டுமென்று முடிவெடுத்தேன்.

மக்களின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அவசியம். ஆனால் மக்கள் வளர்ச்சியை அழித்துவிட்டு எதுவும் கொண்டு வரக்கூடாது. அதேபோல எனது அரசியல் பயணத்தை விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு விட்டு தொடங்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கும் சரியான இடமும் இதுதான். அதேபோல எனது முதல் மாநாட்டில் தீர்மானம் படுத்திய கொள்கைகளில் முக்கியமானதாக இயற்கை வள பாதுகாப்பு, விவசாய நிலங்கள் பாதுகாப்பு என்று கூறியிருந்தேன்.

இது ஓட்டு வாங்குவதற்காக வேண்டுமென சொல்லவில்லை. கட்டாயம் இந்த திட்டத்தை கைவிட வேண்டும், இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுப்பேன். அதேபோல நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. இயற்கை வளங்களை அழித்து இவ்வாறான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டாம். அந்த வகையில் ஆய்வு கூற்றின் படி சென்னையில் தொடர் வெள்ளப்பெருக்கு வருவதற்கு முக்கிய காரணம் சதுப்பு நிலங்களை அளித்தது தான்.

அந்த வகையில் 90% நீர்நிலை விவசாயத்தை தரைமட்டமாக்கி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி உள்ளனர். அரிட்டாப்பட்டி மக்கள் எப்படி நம் மக்களோ அதேபோல தான் பெரம்பூர் மக்களும் நம் மக்கள் தான். என்னை ஊருக்குள் விடக்கூடாது என்பதற்காகவே அனுமதி அளிக்கவில்லை. இது மட்டுமின்றி நமது பிள்ளைகள் சிறிய துண்டு சீட்டு கொடுத்தது கூட பிடிக்கவில்லை அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் இது ஏன் என தெரியவில்லை??

அதேபோல ஆளும் கட்சியாக திமுக இருந்த பொழுது 8 வழி சாலை என தொடங்கி காட்டுப்பள்ளி துறைமுகம் வரை எதிர்த்தவர்கள் தற்பொழுதும் அதே நிலைப்பாட்டை தானே கொண்டிருக்க வேண்டும். ஆட்சி அமைந்த பிறகு ஏன் இப்படி மாற்றம். விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவது எதனால் என்பது புரியவில்லை என கூறினார். மேற்கொண்டு பரந்தூர் ஊருக்குள் கட்டாயம் நான் வருவேன் என்றும் தெரிவித்தார்.