இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!!

0
43
#image_title

இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று(அக்டோபர்1) தங்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து உறுதியான பட்டியல் கிடைத்துள்ளது.

தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகெள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 50 சதவீதம் விஜய் டிவி தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள் ஆவார். அந்த வகையில் சீரியல் நடிகர் விஷ்ணு, வனிதா விஜய்குமார் மகள் ஜோவிகா, மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் யுகேந்திரன், நடிகர் கூல் சுரேஷ் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழுப் பட்டியல்…

01. ஜோவிகா விஜயகுமார்(வனிதா விஜயகுமார் மகள்)

02. யுகேந்திரன்(மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன்)

03. அனன்யா ராவ்(மாடல்)

04. அக்சயா உதயகுமார்(லவ் டுடே நடிகை)

05. பாவா செல்லத்துறை(எழுத்தாளர், நடிகர்)

06. ஆயிஷா(பிக்பாஸ் அமீர் தங்கை)

07. விஜய் வர்மா(டேன்சர், தலைவா பட நடிகர்)

08. சரவண விக்ரம்(பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நடிகர்)

09. பிரதீப் ஆண்டனி(நடிகர், டாடா, வாழ் திரைப்பட நடிகர்)

10. மாயா கிருஷ்ணன்(விக்ரம் பட நடிகை)

11. விஷ்ணு(கணா காணும் காலங்கள் நடிகர்)

12. மணி சந்திரா(கோரியோ கிராபர்)

13. நிக்சன்(ராப் பாடகர்)

14. கூல் சுரேஷ்(நடிகர்)

15. விசித்திரா(நடிகை)

16. பூர்ணிமா ரவி(யூடியூப் பிரபலம்)

17. வினுஷா தேவி(பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை)

18. ரவீனா தாஹா(மௌனராகம் 2 சீரியல் நடிகை)

இந்த பட்டியலில் ரவீனா தாஹா, வினுஷா தேவி, விசித்திரா, மணி சந்திரா, விஷ்ணு, சரவண விக்ரம் ஆகியோர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள் ஆவார். எனினும் இந்த பட்டியில் உறுதியானதா என்பது இன்று(அக்டோபர்1) மாலை 6 மணிக்கு தெரியவரும். எதிர்பாராததை எதிர் பாருங்கள்!