Breaking News

எதிர்பார்ப்பை எகிர வைக்கும் பிக்பாஸ் சீசன் 7… பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை வீட்டுக்குள் செல்கிறார் என தகவல்… 

எதிர்பார்ப்பை எகிர வைக்கும் பிக்பாஸ் சீசன் 7… பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை வீட்டுக்குள் செல்கிறார் என தகவல்…

 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பாஸ் (எ) பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு வீடுகள் இருக்கும் என்று பேசப்பட்டு வருகின்றது. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் பரவி வருகின்றது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வழக்கம் போல ஏழாவது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார். அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றது.

 

அந்த வகையில் நடிகர் ஆரியா நடிகர் சந்தானம் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்த நடிகை அன்னப்பூரணி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகை அன்னப்பூரணி பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் கண் தெரியாத பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் நடிகை அன்னபூரணி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

 

அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் வனிதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சில்லுனு ஒரு காதல் சீரியலில் அபிராமி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அன்னப்பூரணி அவர்கள் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.