பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

Photo of author

By CineDesk

பிக்பாஸ் நடிகைக்கு வந்த குழந்தை ஆசை: ராகவா லாரன்ஸ் இடம் கேட்ட ஐடியா!

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை காஜல். இவர் பிக்பாஸ் 3 ரன்னரின் முன்னாள் மனைவி ஆவார். இந்த நிலையில் தற்போது காஜலுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் இடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும், குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையவில்லை என்றும், குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல என்பதால் அதுகுறித்து உங்கள் உதவி தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நீங்கள் உதவி செய்தால் அந்தக் குழந்தையின் தேவைகளை தன்னால் பூர்த்தி செய்ய முடியும் என்றும், இந்த உதவியை தனக்கு செய்தால் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்றும் நடிகை காஜல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுஜித் ஆழ்துளை குழாயில் விழுந்து மரணம் அடைந்தபோது அவனது பெற்றோருக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தைக்கு சுஜித் என்று பெயர் வைத்து வளர்க்குமாறு டுவிட்டரில் ராகவா லாரன்ஸ் ஆலோசனை கூறியிருந்தார் என்பதும் இந்த டுவீட்டை பார்த்துதான் காஜல் தற்போது ராகவா லாரன்ஸிடம் இந்த உதவியை கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்த்தக்கது