தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

Photo of author

By CineDesk

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய விஷயங்கள் தவறாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே நான் இருக்க முடியாத அளவு எனக்கு பிரச்சனைகள் உள்ளன. இதனால் வேறு மாநிலம் சென்றால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. என் மீது 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டுமே பொய்யானது, போலியானது. லஞ்சம் வாங்கி கொண்டு என் மீது தமிழக போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் தரவில்லை. நான் ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து பத்து நாட்களில் மொத்தமாக தருவதாக கூறினார்கள். ஆனால் இன்று வரை எனக்கு பேமெண்ட் வரவில்லை.

இது சம்மந்தமாக விஜய் டிவிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இந்த பேட்டிக்கு பின்னரும் விஜய் டிவி ஒப்பந்தப்படி எனது சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொலைக்காட்சியும் பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும். மேலும் விஜய் டிவி மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.