முகினின் தந்தை, சாண்டியின் மாமனார்: ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வு

Photo of author

By CineDesk

முகினின் தந்தை, சாண்டியின் மாமனார்: ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வு

CineDesk

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தொடர்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அதிகாலையில் பிக்பாஸ் வின்னர் முகினின் தந்தையார் மலேசியாவில் காலமாகி விட்டதாக செய்திகள் வெளி வந்ததும் உடனடியாக சக போட்டியாளர்கள் முகினுக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் மலேசியாவுக்கு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முகினின் தந்தை மறைந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் ரன்னரான சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர் ராஜ் என்பவர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இதனை அடுத்து சாண்டிக்கும் அவரது மனைவிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்களின் வீடுகளில் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது