ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி! 

Photo of author

By Amutha

ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி! 

இன்று அரிய நிகழ்வாக ஒரே நேர்கோட்டில் வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் தோன்றுவதை காணலாம்.

மிக அரிதான நிகழ்வான இதில் வியாழன் மற்றும் வெள்ளிக் கோள்களை அருகில் காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் சூரியனை சுற்றி வருகையில் அதற்கே உரிய நீள் வட்ட பாதையில் கோணங்களில் சாய்ந்து சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும்போது சில சமயங்களில் கோள்கள் நேர்கோட்டில் வருவது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் நிலா, மிகப்பெரிய ராட்சத கோளான வியாழன் மற்றும் வெப்பமான கோளான வெள்ளி கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் அதேபோன்று இன்று புதன்கிழமை வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் மிக அருகே சந்திக்கும்  நிகழ்வை இன்று காண இயலும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கோள்களும் சுமார் 0.5 டிகிரி இடைவெளியில் இருக்கும் என தெரிகிறது. உண்மையில் இரண்டு கோள்களுக்கும் இடையே பல மில்லியன் கிலோமீட்டர் கணக்கான இடைவெளி இருக்கும். இரண்டும் சூரியனை சுற்றி வரும் பொழுது ஒரே நேர்கோட்டில் வருவதால் அருகில் இருப்பது போன்று தோன்றும்.

இரண்டு கிரகங்களும் ஏற்கனவே வானில் மிகவும் பிரகாசமாக உள்ளன. இந்த இரண்டு கிரகங்களும் அருகில் சந்திக்கும் நிகழ்வை உலகெங்கும் உள்ள மக்கள் வெறும் கண்களால் வானில் தோன்றும் இந்த அரிய நிகழ்வை காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.