தமிழ் சினிமாவில் மிகப் பெரும் துயரம்… ஃபேவரைட் எடிட்டர் ஆர் விட்டல் காலமானார்…!

Photo of author

By Sakthi

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் துயரம்… ஃபேவரைட் எடிட்டர் ஆர் விட்டல் காலமானார்…!

 

தமிழ் சினிமாவின் பழம்பெரும் படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் அவர்கள் காலமான செய்தி தமிழ் திரையுலகில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

பழம்பெரும் படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். மேலும் நடிகர் எஸ்.பி முத்துராமன் அவர்களுடன் இணைந்து பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கழுகு, முரட்டுகாளை, போக்கிர ராஜா உள்பட 35 திரைப்படங்களுக்கு ஆர்.விட்டல் அவர்கள் எடிட்டிங் செய்துள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்திற்கும் ஆர்.விட்டல் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் இயக்குநராக 5 திரைப்படங்களை இயக்கிய ஆர் விட்டல் அவர்கள் 3 படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

 

நடிகர் எஸ்.பி முத்துராமன் அவர்கள் நடித்த பல படங்களில் ஆர். விட்டல் அவர்கள்  எடிட்டிங் வேலை செய்துள்ளார். நடிகர் எஸ்பி முத்துராமன் மற்றும் ஆர்.விட்டல் கூட்டணியில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகில் 300 படங்களுக்கும் மேல் எடிட்டராக ஆ.விட்டல் அவர்கள் பணியாற்றியுள்ளார்.

 

வயது மூப்பின் காரணமாக சென்னையில் ஆர்.விட்டல் அவர்கள் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று(ஜூலை26) மதியம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். எடிட்டர் ஆர்.விட்டல் அவர்களின் மறைவிற்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.