பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்!
திரைப்பட நடிகையும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் வின்னருமான நடிகை ரித்விகா சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்றின் காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரின் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக காரை ஓட்டியதாகவும் எனவே இந்த பயணத்தை தான் பாதுகாப்பற்ற பயணமாக கருதியதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி கார் சரியான கண்டிஷனில் இல்லை என்றும் தனது ட்விட்டர் தளத்தில் ரித்விகா பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காரின் எண் மற்றும் காரின் மாடல், டிரைவரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு அந்த நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ஒரு ரித்விகாவின் புகார் குறித்து பதிலளித்துள்ள அந்த தனியார் கேப் நிறுவனம் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி உள்ளது
இந்த நிலையில் ரித்விகா நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார் என்பது, ஆதிரை அதியன் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது