மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! பீகார் தொழிலாளி மீது பாய்ந்து போக்சோ சட்டம்!

Photo of author

By Sakthi

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கின்ற தேவதானப்பட்டியில் வசித்து வரும் ஒரு 17 வயது சிறுமி தேனியில் இருக்கின்ற ஒரு தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார் . அந்த பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்த சிறுமி வேலை செய்து வரும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த சிக்கந்தர் சவுத்ரி என்ற தொழிலாளி அந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருக்கிறார். வந்த 17 வயது சிறுமி தன்னுடைய தாய் தகப்பனிடம் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ,அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளி மீது தேவதானப்பட்டி காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதன்படி காவல் துறையினர் செய்த விசாரணையில் அந்த தொழிலாளி சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகந்தர் சவுத்ரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் அந்த நபரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.