நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

0
197

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

தூத்துக்குடியை சேர்ந்த சாம்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் சரவணன் ஆகியோர் அவரின் பைக்கை திருடியது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

​இதில் கைதான் சந்தோஷ்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமுற்று சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் பார்க்க சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து ‘நீங்கள் யார்?’ என கேள்வி கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ரஜினிகாந்த் ‘நான் தாம்ப்பா ரஜினிகாந்த்’ என்று பதிலளித்தார்.

தற்போது அவர் ஒரு பைக் திருடன் என்பது தெரிய வந்ததும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அவரை ‘நான் தாம்ப்பா பைக் திருடன்’ என்று வறுத்து எடுக்கின்றனர். அன்று ரஜினியை கேள்வி கேட்ட சந்தோஷை போராளி போல் காசுக்கு மாறடிக்கும் கூட்டம் ஆதரித்தது. நல்லவங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள், ஆனால் கொஞ்சம் நாள் ஆகும் என்பதுதான் இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வரும் நீதி ஆகும்

Previous articleஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !
Next articleபெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !