“எனது அனைத்து சொத்துகளும் அறக்கட்டளைக்கு…” பில்கேட்ஸ் அதிரடி அறிவிப்பு!

0
207

உலகின் நம்பர் 1 பணக்காரராக பல ஆண்டுகளாக கோலோச்சி கொண்டு இருந்தவர் பில்கேட்ஸ்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் பல ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது அந்த அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் தனது சொத்துகள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுப்பதை விட இந்த அறக்கட்டளைக்கே செலவிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பில் & மெலிண்டா அறக்கட்டளை உலகின் மிகப்பெரிய அறக்கட்டளைகளில் ஒன்றாக செயல்படுகிறது. சமீபத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்த அறக்கட்டளை பெரிய அளவில் நிதி முதலீடு செய்ததாக சொல்லப்பட்டது. பில்கேட்ஸின் இந்த அறிவிப்பு அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

Previous articleஇனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு??
Next articleபெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ்கள் தேக்கம்! கையூட்டு எதிர்பார்க்கின்றாரா விஏஓ?