இந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்!!

Photo of author

By Divya

இந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்!

நம் நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை(12%) பிடித்தம் செய்யப்பட்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி(PF) கணக்கில் சேமிக்கப்படுகிறது.இதில் தொழிலாளர் ப்ராவிடன்ட் திட்டத்தில் 3.67% மற்றும் தொழிலாளர் பென்சன் திட்டத்தில் 8.37% வரவு வைக்கப்படுகிறது.

இது ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக விளங்குகிறது.இவ்வாறு வரவு வைக்கப்படும் பிஎப் இருப்பு தொகையை எப்படி எடுக்க வேண்டுமென்பதில் பலரும் குழப்பம் அடைகின்றனர்.நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது வேலை செய்திருந்தால் மட்டுமே இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

அதேபோல் நீங்கள் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர் என்றாலும் உடனே பென்சன் பணம்]பெற முடியாது.10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும் PF பெறுவதற்கான தகுதியை மட்டுமே அடைவீர்கள்.உங்களுக்கு 50 வயதத்திற்கு மேல் ஆகும் பொழுது மட்டுமே முழு பென்சன் தொகையை பெற முடியும்.

ஆனால் நீங்கள் ஒரு நிறுனத்தில் 10 வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்தவராக இருந்தால் பென்சன் மற்றும் ப்ராவிடன்ட் தொகையை முழுமையாக எடுக்க 10C படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தங்கள் பென்சன் மற்றும் ப்ராவிடன்ட் தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.ஒருவேளை நீங்கள் பணி ஓய்விற்கு பிறகு பென்சன் தொகையை பெற விரும்பினால் 10D படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விதிமுறையை பின்பற்றினால் மட்டுமே பென்சன் தொகையை முழுமையாக பெறமுடியும்.