உடல் சூட்டை குறைக்க உதவும் பீர்க்கங்காய்! இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என்று தெரியுமா? 

Photo of author

By Sakthi

உடல் சூட்டை குறைக்க உதவும் பீர்க்கங்காய்! இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என்று தெரியுமா?
நாம் ஒதுக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. பீர்க்கங்காயில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இருப்பினும் பலர் இந்த பீர்க்கங்காயை சாப்பிட விரும்புவது கிடையாது. அது ஏன் என்று தெரியவில்லை.
பீர்க்கங்காயில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், புரதம், வைட்டமின் சி, தயாமின், ஜிங்க், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இத்தனை சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று பார்க்கலாம்.
பீர்க்கங்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* பீர்க்கங்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது என்பதால் இதை சாப்பிடும் பொழுது நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
* பீர்க்கங்காயை சாப்பிடுவதால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடையும். மேலும் உடல் சூடு குறையும்.
* பீர்க்கங்காயில் பொட்டாசியம், செலினியம், காப்பர் போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றது. இதனால் பீர்க்கங்காயை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு அதிகளவு ஆற்றல் கிடைக்கின்றது.
* பொதுவாக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அந்த வகையில் இந்த பீர்க்கங்காயை நாம் சாப்பிடுவதால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
* பீர்க்கங்காயின் இலைகளை நாம் அரைத்து உடலில் வீக்கம் இருக்கும் இடங்களில் தடவினால் வீக்கம் குறையும்.
* பீர்க்கங்காயை நாம் சாப்பிடுவதால் நம்முடைய சருமத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்கள், சுருக்கங்கள், கயும்புள்ளிகள் ஆகியவை தடுக்கப்படுகின்றது. மேலும் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகின்றது.
* பீர்க்கங்காயை நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றது. இதனால் நம்முடைய இரத்தம் சுத்தமடைகின்றது.
* பீர்க்கங்காயை நாம் சாப்பிடுவதால் வைட்டமின் ஏ சத்துக்கள் நம்முடைய உடலுக்கு அதிகளவு கிடைக்கும். இதனால் நம்முடைய கண்களின் பார்வை திறன் அதிகரிக்கின்றது.
* பீர்க்கங்காயை நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைகின்றது.
* பீர்க்கங்காயை நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய கல்லீரல் மற்றும் பித்தப்பை இரண்டும் சிறப்பாக இயங்கும்.
* பீர்க்கங்காயை நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கலாம்.
* பீர்க்கங்காயை நாம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.