ஜென்ம நட்சத்திரத்தின் வழிபாட்டு நன்மைகள்!

Photo of author

By Sakthi

ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் லக்னம் என்பது ஆன்மாவாகவும், சந்திரன் நின்ற ராசி உடலையும், குறிக்கும் சந்திரன் ஏதாவது ஒரு ராசியில் ஏதோ ஒரு நட்சத்திர பாதத்திலிருக்கும் அதுவே பிறந்த ஜன்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு ராசியில் உள்ள நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் இருக்கிறார்கள்.

அந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவரே அவர்களின் உடலை இயக்குவார் கர்மவினைக்கு ஏற்றவாறு உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக, திகழ்பவர்கள் ஜென்ம நட்சத்திர அதிபதிகள் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரமன்று கோவிலுக்கு சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என தெரிவித்து வைத்தார்கள்.

அவ்வாறு வழிபாடு செய்தால் தீமைகளின் தாக்கத்தை வெகுவாக குறைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாளாக ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திர நாள் உகந்த நாளாக திகழ்கின்றன.

ஆகவே ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் அந்த அதிகாரியின் கோவிலுக்கு சென்று ஜாதகத்திலுள்ள தோஷங்கள் விலக விசேஷ அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை செய்தல், உள்ளிட்டவை நல்லது என்று தெரிகிறது.

மிகுந்த வசதியுடன் இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெறலாம். வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள் ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்தவுடன் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தால் அவருடைய பித்ருக்களின் மனம் மகிழ்ச்சியிலிருந்து முழுமையான ஆசி கிடைக்கும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண்திருஷ்டி நெருங்காது. உள்ளுணர்வு சிறப்பாக இயங்கி வரும் தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் ஏற்படும் என்கிறார்கள்.

ஆங்கில தேதியை அடிப்படையாக வைத்து பிறந்த தேதி அன்று ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்கிறார்கள், இது மிகவும் தவறு அவர் பிறந்த மாதத்தில் ஜென்ம நட்சத்திரத்தில் கொண்டாடுவதுதான் நன்று.

அப்போதுதான் கிரகங்கள் நட்சத்திரங்கள் அவர் பிறப்பின் போது இருந்தது போலவே அமைந்திருக்குமாம். அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் அல்லது உபாசனை தெய்வம் எது என்பதை அறிந்து அதனை வழிபட்டால் 100% வெற்றி கிடைக்கும் என்கிறார்கள்.