ருசியான மொச்சை சாம்பார் செய்வது எப்படி?

0
196

தேவையான பொருட்கள்

உலர் மொச்சை- 100 கிராம்
சாம்பார் பொடி-2ஸ்பூன்
துவரம் பருப்பு- 100 கிராம்
புளி-எலுமிச்சைப்பழ அளவு
தேங்காய்த்துருவல்- சிறிய கப்
கடுகு, வெந்தயம், 1ஸ்பூன்
தனியாத்தூள்-1 ஸ்பூன்
கடலைப்பருப்பு-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய், கருவேப்பிலை,
பெருங்காயத்தூள்- சிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை

மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவேண்டும் துவரம்பருப்பை குழைவாக வேக விட வேண்டும் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை, எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் விழுதாக அரைக்க வேண்டும்.

புளியைக் கரைத்து வாணலில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை உள்ளிட்டவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இத்துடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த தேங்காய் விழுது உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்து மேலும் கொதிக்க விட வேண்டும். வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உள்ளிட்டவற்றை தாளித்து குழம்பில் சேர்த்து பின்னர் இறக்கவேண்டும் மொச்சை சாம்பார் ரெடி.

Previous articleஜென்ம நட்சத்திரத்தின் வழிபாட்டு நன்மைகள்!
Next articleமனதில் புது நம்பிக்கை பிறக்க மனோமய கோசம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here