நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Photo of author

By Anand

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

பிறந்த கிழமை பலன்கள் – Pirantha Kizhamai Palangal

ஒவ்வொருவரின் பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி உள்ளிட்டவைகளை கொண்டு பலன்கள் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இதை போலவே பிறந்த கிழமை அடிப்படையில் ஒருவரின் குண நலன்கள், அவர்களுக்கான பலன்கள் மற்றும் அவர்களுக்கு கிழமையின் அடிப்படையில் வரும் தீமைகள் பற்றியும், அந்த தீமைகளுக்கான வழிபாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

Birthday Rasipalan1
Birthday Rasipalan1

அந்த வகையில் நீங்கள் பிறந்த கிழமையின் அடிப்படையில் உங்களுக்கான பலன்களையும், செய்ய வேண்டிய வழிபாடுகள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

ஞாயிற்றுகிழமை பிறந்த பலன்:

  • ஞாயிற்று கிழமை நாளில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும்,ஆர்வத்துடனும், மிகவும் கடினமான வேலைகளை கூட தங்களுடைய ஆற்றலால் எளிமையாக முடிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
  • மேலும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களாகவும், போட்டி மனப்பான்மை மற்றும் ஆளுமை திறன் கொண்டவர்களாகவும் காணப்படுவர்.
  • ஞாயிற்று கிழமை நாளில் பிறந்தவர்கள் தன்னுடன் இருக்கும் மற்றவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

வழிபாடுகள்:

  • இந்த நாளில் பிறந்தவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது அவர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். இவ்வாறு தெய்வ வழிபாடு செய்யும் போது கோதுமையால் செய்யப்பட்ட நெய்வேய்தியம் செய்வது மிகவும் நல்லது.

திங்கட்கிழமை பிறந்த பலன்:

  • திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் பொறுமை குணம் உடையவர்களாகவும், அமைதியான மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடமுள்ள நகைச்சுவை பேச்சு திறனால் எளிதில் மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள்.
  • மேலும் அவர்கள் நல்ல கற்பனை வளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக நியாய தர்மங்களை கடைபிடிப்பவர்களாகவும் அதன்படி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு சொந்த தொழில் செய்தால் நல்ல பலன் கொடுக்கும்.

வழிபாடுகள்:

  • திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் முதலில் தாயை வணங்கி ஆசி பெறுவதால் அதற்கேற்ற நல்ல பலன்களை அடையலாம். மேலும் சக்தி கோவிலுக்கு சென்று வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்து, கற்கண்டு நெய் வேய்தியம் செய்தால் மேலும் சிறந்த பலனை அடையலாம்.

செவ்வாய்க்கிழமை பிறந்த பலன்:

  • செவ்வாய்க்கிழமை நாளன்று பிறந்தவர்கள் செய்யும் செயலில் வெற்றி அடைய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக அளவு அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் எந்தவிதமான பிரச்சனைக்கும் போக மாட்டர்கள், ஆனால் தங்களிடம் வந்த சண்டையை விட மாட்டார்கள்.
  • மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர்கள் நியாயம், தர்மத்திற்கு, கட்டுப்பட்டவர்கள். தங்களை சுற்றியுள்ள மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் இறுதியில் தான் முடிவெடுப்பதே சரி என்ற மனப்போக்கு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

வழிபாடுகள்:

  • செவ்வாய்க்கிழமை நாளில் பிறந்தவர்கள் காலையில் முருகப்பெருமனை அரளிப்பூவால் அர்ச்சனை செய்தால் நல்லது நடக்கும். மாலையில் பைரவரை வழிபடுவதும் நல்லது.

புதன்கிழமை பிறந்த பலன்:

  • புதன் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல இளமையான வசீகரமான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தாங்கள் மேற்கொண்ட செயலை முடிப்பதற்கு எதையும் செய்வார்கள். ரகசியத்தை பாதுகாக்க கூடியவர்கள், தெய்வபக்தி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வழிபாடுகள்:

  • புதன் கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் துளசி மற்றும் மரிக்கொலுந்தால் மகா விஷ்ணுவை வழிபட்டால் நல்லது நடக்கும். கடவுளுக்கு பாசிப்பயறு, சுண்டல் நெய்வேய்தியம் செய்தால் மிகவும் நல்லது.

வியாழக்கிழமை பிறந்த பலன்:

  • வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவார்கள். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். மற்றவர்களை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் பணிபுரியும் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள், தங்களை சுற்றியுள்ள உறவினர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்கள்.

வழிபாடுகள்:

  • வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் சூரிய உதயத்திற்கு முன் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை பாராயணம் செய்வது நல்லது. மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • கருட தரிசனம் செய்வது மிகவும் நல்லது.

வெள்ளிக்கிழமை பிறந்த பலன்:

  • வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் தம்முடைய பேச்சாற்றலால் தங்களை சுற்றியுள்ள மற்றவர்களை எளிதில் தன் வயப்படுத்துவார்.
  • மேலும் தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் பூர்த்தி செய்வார்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பையும், பாசத்தையும் கொண்டிருப்பார்.

வழிபாடுகள்:

  • வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு தரும்.
  • பால், பழம், கற்கண்டு மற்றும் தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

சனிக்கிழமை பிறந்த பலன்:

  • சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். எடுத்த வேலைகளை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் தொடங்குவார்கள்.
  • இவர்கள் சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என செயல்படுபவர்கள்.

வழிபாடுகள்:

  • சனிக்கிழமையில் பிறந்தவர்கள் காலையில் எழுந்து நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும்.
  • வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம் பயக்கும்.