கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!

0
164
Biryani party with cannabis smuggling leader! Photo goes viral!
Biryani party with cannabis smuggling leader! Photo goes viral!

கஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!

தொடர்ந்து தமிழ்நாட்டில் கஞ்சா விற்பது அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார் தகவலறிந்து கண்டறிந்து வந்தாலும் ஒரு பக்கம் கஞ்சா விற்பது தொடர்ந்து தான் வருகிறது. குறிப்பாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பல புகார்களும் தகவல்களும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு அவர்களும் அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட கஞ்சா அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் நாகை மாவட்ட துறைமுகத்தில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூ 4 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. இந்த கஞ்சா கடத்தல் குறித்து, இதனை விசைப்படகு மூலம் கடத்த முயன்ற அந்த உரிமையாளர் மோகன் மற்றும் சிலம்பு செல்வன் நிவாஸ் என 5 பேரை கைது செய்தனர். இவற்றில் சிலம்பு செல்வன் என்பவர் தான் கஞ்சா கடத்தலின் தலைவன் என கூறுகின்றனர். இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது இவரது வீட்டிலும் மாவட்ட நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் எதுவும் வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட 5 பேரும் வெளியே வந்தனர். அதனை அடுத்து சோதனை மேற்கொண்ட நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி கஞ்சா கடத்தல் இன் தலைவன் சிலம்பு செல்வன் ஒரு தனியார் விடுதியில் பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் நடக்காமல் பாதுகாக்கும் காவலரே இப்படி குற்றவாளிகளுடன் அமர்ந்து உணவு உண்ணலாம் என பல கேள்விகள் எழுந்து வருகிறது. வீட்டில் சோதனை இடுவது போல நாடகமாடி விட்டு வெளியில் இவருடன் பரஸ்பர நட்புறவில் இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என பலர் கூறுகின்றனர். இதனால் காவல்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை உடைந்து விடுகிறது.

Previous articleமகிழ்ச்சி! இந்தியாவில் இன்று சற்றே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!
Next articleசுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!