அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ஆளுநர்! அந்த நிலை இங்கும் வரலாம்! எச்சரிக்கை மணி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பரிசீலனை செய்து வந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபை கூடுவதை நிறுத்திவைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது அரசியல் அரங்கில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மேற்குவங்கத்தை போல தமிழகத்திலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை உண்டாகலாமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலை கவுண்டன் ஊரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேற்குவங்கத்தில் ஆளுநர் சட்டசபை முடக்கியிருக்கிறார் தமிழகத்திலும் இதேபோன்று ஆட்சியில் தவறுகள் நடைபெற்றாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை உண்டாகலாம். அதே நிலைமை இங்கே தமிழகத்திலும் எதிர்காலத்தில் நிலவுவதற்கான வாய்ப்பிருக்கிறது ஆகவே ஆளும் தரப்பு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

எடப்பாடியின் இந்த பேச்சுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக இந்த தேர்தலில் தனித்து களம் காணவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் அதிமுகவிற்கு இந்த சமயத்தில் அந்தக் கட்சிக்கு எதிரான நிலையை முன்னெடுத்து வருகிறது பாஜக.

இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்ற பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்ட சபை உறுப்பினருமான, வானதி ஸ்ரீனிவாசன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சட்டத்தின் ஆட்சியை தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி ஆட்சி நடத்துகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். மேற்கு வங்க மாநில ஆளுநர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதனடிப்படையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார் என தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தை போல நெருக்கடியான சூழ்நிலை தமிழகத்தில் இருப்பதாக நான் கருதவில்லை என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்று எதுவுமில்லை இதில் மாநில தலைமை ஏதாவது கருத்து தெரிவிக்கலாமென்று தெரிவித்திருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.

கூட்டணியிலிருந்து பிரிந்து சென்று அதிமுகவிற்கு அதிர்ச்சியில் வழங்கியது. இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காததால் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.