ADMK BJP: அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுகள் இருக்கும் பட்சத்தில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஆரம்ப கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்று கூறிவந்த நிலையில் தற்பொழுது அண்ணாமலை லண்டன் சென்று வந்ததிலிருந்து பேச்சே மாறி உள்ளது.
அதாவது சட்டமன்ற தேர்தலின் போது தான் இது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறி வருகிறார். இவரைப் போலவே அண்ணாமலையும் அதிமுக குறித்து எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை. அதற்கேற்றவாறு சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று அண்ணாமலை-யிடம் பேட்டி எடுத்தது. அதில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை கூறியதாவது, தனக்கும் அதிமுகவிற்கும் தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் கூட்டணி ஆட்சி அமையும் என்று உறுதியளித்துள்ளார். இவர்களின் இருவரின் பதிலும் சமீபத்தில் மாறுபட்டு காணப்படுவதால் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி இடம்பெறும் எனக் கூறுகின்றனர்.
இதனை சுதாகரித்துக் கொண்டுதான் விஜய் அதிமுகவுடன் தங்களை இணைத்து பேச வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பார் என்று கூறுகின்றனர்.