ADMK BJP: அதிமுக-வுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க அண்ணாமலையை தவிர்த்து புதிய தலைவரை நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். அதே சமயம் ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். தற்பொழுது அண்ணாமலை பதவியேற்று ஓர் ஆண்டு ஆன நிலையில் மாநில தலைவர் பதவிக்கான கால வரையறை முடிவடைய உள்ளது. இதனால் இந்த ஆண்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா அல்லது அண்ணாமலையே தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையேயான பரஸ்பர உறவு முடிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். அதிலிருந்து ஒரு டெபாசிட் கூட பாஜகவால் வாங்க முடியவில்லை. இந்த சூழ்நிலையை மாற்ற வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சியும் இணைய வேண்டும் என்ற திட்டத்தை பாஜக தலைமை கொண்டுள்ளது. அதனால் அண்ணாமலையை மாற்றி தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் போன்ற மூத்த நிர்வாகிகளை நியமிக்கலாம் என்ற ஆலோசனையை செய்து வருகின்றார்களாம்.
இப்படிப்பட்ட நிலையில் தான் அண்ணாமலை தனது நிலையிலிருந்து சற்று பின் தங்கியுள்ளார். வெளிநாட்டில் படிப்பை முடித்து வந்ததிலிருந்து அதிமுக குறித்து எந்த ஒரு எதிர்மறை கருத்தும் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக ஆதரவளிக்கும் வகையில் தான் அவ்வப்போது பேசி வருகிறார். இதனால் தனது பதவியை தக்கவைக்க மாறிவிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் கட்டாயம் அண்ணாமலை இருந்தால் கூட்டணி இணைப்பது கடினம், மாறாக புதிய தலைவர் நியமிப்பது கை கொடுக்கும் எனக் கமலாலயம் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.