பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி

Photo of author

By Parthipan K

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி

சென்னை:  பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, இரண்டுமே ஒன்று தான் என்று என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, சீமான் பேசியதால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும் போது, ராஜீவ் காந்தியை கொன்றோம் என்பதும் சரியே என்றார்.

அவரின் இந்த பேச்சு தமிழகத்தில் கடும்  அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சீமான் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில், சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:ராஜீவ்காந்தி கொலை வழக்கை 28 ஆண்டுகளாக பேசிக்கொண்டு புலிகளை ஒழித்து விட்டதாக சொல்கின்றனர்.

ஆனால், புலிகள் மீதான தடையை நீடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள்.

தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆட்சியில் இருந்தபோது காவிரி நதி நீரை தமிழகத்துக்கு வாங்கி தர முடிந்ததா? செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றனர்.

இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசுதான். அதற்கு திமுக ஆதரவு தெரிவித்ததை யாராவது மறுக்க முடியுமா?.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாகத்தான் பார்க்கிறோம். கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான் என 2 கட்சிகளும் சொல்கிறது. அணு உலையை எதிர்த்தால் தேச துரோகி என 2 கட்சிகளும் கூறுகின்றன.

நீட் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பாஜக. பொருளாதார வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டியை கொண்டு வந்ததுதான் காரணம்.

சீன அதிபரை தமிழகத்தில் சந்தித்ததால் பிரதமர் மோடி வேட்டி கட்டி இருப்பார். ஆனாலும் தமிழன் பாரம்பரிய உடையை அணிந்தது மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.